News June 4, 2024
27 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவக்கத்திலிருந்து முன்னணியில் இருந்து வந்த கனிமொழி இறுதியில் 5, 37, 879 வாக்குகள் பெற்று மெகா வெற்றி பெற்றார். மேலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, த மா க ,நாம் தமிழர் வேட்பாளர் உட்பட 27 பேர் என அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளார்
Similar News
News August 22, 2025
தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது. எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 29ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனா்.
News August 22, 2025
தூத்துக்குடி: அதிகாரிகளை விளாசிய கலெக்டர்

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வில்லிசேரி விவசாயி பிரேம்குமார் உளுந்துக்கான கொள்முதல் பணம் 4 மாதமாக வழங்கப்படவில்லை என முறையிட்டார். கலெக்டர் இளம்பகவத், அவர்களுக்கு 4 மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?, ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? உடனே சென்னை சென்று, பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும் என உத்தரவிட்டார்.
News August 21, 2025
தூத்துக்குடி இரவுநேர ஹலோ போலீஸ் ரோந்து காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் தூத்துக்குடி காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோரம்பள்ளம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபடும் இரவு நேர காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.