News November 24, 2024
27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
நெல்லையில் ரூ.14.77 கோடிக்கு அடிக்கல் நாட்டல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி விஜயாபதி ஊராட்சியில் நேற்று (நவ. 21) காலை 10.45 மணிக்கு ரூபாய் 14.77 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மையம் அமைப்பதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான C.ராபர்ட் புரூஸ் இணைந்து அடிக்கல் நாட்டினர். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.1.95 கோடியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி, கூட்டப்புளி மீனவ கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில், மீனவப் பெண்களுக்கான, கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை அமைப்பதற்காக, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் நேற்று (நவ 21) காலை அடிக்கல் நாட்டினார்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.2.3 கோடியில் திட்டப் பணிகள்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், கூத்தன் குழி ஊராட்சி, கூத்தன்குழி மீனவக் கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில், மீன்கள் இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டடப்பணிகளை, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, இன்று (நவ 21) காலையில், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் தலைமை வகித்தார்.


