News November 24, 2024
264 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: 4293 தீர்மானங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டு கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்கள் பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 264 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 4293 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News October 28, 2025
உடுமலையில் இறைச்சி பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி!

உடுமலை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர் குறித்த கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட www.tnskill.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 28, 2025
திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தியில்; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்.31ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!

டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் அவ்வப்போது இணைக்கப்படுகிறது. அவ்வகையில், கோவை – ராமேஸ்வரம் ரயிலில் (எண்: 16618), நவ.04 முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது கோவையிலிருந்து, திருப்பூர், ஈரோடு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.


