News September 3, 2025
52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்

ஒன்றரை வருடமாக இன்ஸ்டாவில் காதலித்த பெண்ணை முதல்முறையாக நேரில் சந்தித்த போது, உ.பி.யை சேர்ந்த அருண்(26) அதிர்ச்சியடைந்துள்ளார். இன்ஸ்டா Filter-ஐ பயன்படுத்தி, தனது வயதை குறைத்து காட்டிய ராணிக்கு(52), 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவருடன் தனிமையில் இருந்தது மட்டுமின்றி, ₹1.5 லட்சத்தையும் கறந்துள்ளார். ஆனால், ராணி தன்னை கல்யாணத்திற்கு வற்புறுத்தவே, அவரை துப்பாட்டாவால் கொலை செய்துள்ளார்.
Similar News
News September 3, 2025
நாவல் to சினிமா: படங்களின் லிஸ்ட்

சினிமாவிற்கும், இலக்கியத்திற்கும் ஒரு ஆழமான நட்புறவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் சொந்த அனுபவங்களை திரைக்கதையாக மாற்றி இயக்குநர்கள் படங்களை உருவாக்கினாலும், அவ்வப்போது நாவல்களில் இருந்தும் படங்கள் பரிணமிக்கின்றன. அந்த வகையில், நாவலை மையமாக வைத்து உருவான படங்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம். இதில் விடுபட்ட படங்கள், உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் பண்ணுங்க.
News September 3, 2025
GST 2.0: இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்றைய GST கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அதன்படி *1200cc-க்கு அதிகமான கார்கள், 350cc-க்கு அதிகமான பைக்குகளுக்கு 40% வரிவிதிக்கப்படும். *₹40 லட்சத்திற்கு குறைவான EV கார்களுக்கு 18%, ₹40 லட்சத்திற்கு அதிகமான EV கார்களுக்கு 40% வரி. *நிலக்கரிக்கான வரி 5%-ல் இருந்து 18% ஆக உயர்வதால், மின்சார கட்டணம் உயரும். *பிராண்டட் ஜவுளி பொருள்களுக்கு 18%-ஆக வரி உயர்த்தப்படுமாம்.
News September 3, 2025
வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.