News March 16, 2024

மதுரையில் காத்திருக்கும் 26 லட்சம் பேர்!

image

10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 லட்சத்து 77 ஆயிரத்து 220 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 13, 61,094 பெண் வாக்காளர்களும், 13,15,866 ஆண் வாக்காளர்களும், 260 மூன்றாம் பாலினித்தவர்கள் என 26,77,220 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 24, 2025

மதுரை: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

மதுரை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 24, 2025

மதுரை: பச்சை குத்தியதால் பறிபோன மாணவனின் கனவு

image

மதுரை, அருள்தாஸ்புரம் பாலமுருகன் என்பவரின் 17 வயது மகன் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஈரோட்டில் ராணுவ தகுதி தேர்வில் பங்கேற்ற நிலையில், கையில் பச்சை குத்தியிருந்ததால் நிராகரிக்கபட்டதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து செல்லுார் போலீசார் விசாரணை.

News September 24, 2025

மதுரை மீனாட்சிக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா இரண்டாம் நாளை முன்னிட்டு இன்று (செப்.23) மீனாட்சி அம்மன் சிறப்பு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!