News September 5, 2025
FB, Insta உள்பட 26 செயலிகளுக்கு தடை

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், X உள்பட 26 சோஷியல் மீடியா செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. சோஷியல் மீடியாக்கள், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை நோக்கமாக கொண்டு சமீபத்தில் அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் முறையாக பதிவு செய்யாத செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிக்டாக் செயலி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தடை இல்லை.
Similar News
News March 10, 2026
தொகுதிப் பங்கீடு .. EPS-ஐ சந்திக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று திருச்சி வருகிறார். திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வரும் பியூஷ் கோயல், இன்றிரவு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பின், நாளை தொகுதிப் பங்கீடு தொடர்பாக EPS-ஐ சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
ஈரான் மீது கொடூர தாக்குதல்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹோர்மூஸ் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதை தடுத்தால், ஈரான் மீது 20 மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மரணமும், நெருப்பும், சீற்றமும் ஈரானை ஆளும் என்றும் ஈரான் ஒரு நாடாக மீண்டும் கட்டமைக்க முடியாத அளவிற்கு சிதையும் எனவும் எச்சரித்துள்ளார்.
News March 10, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம், அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. EPS-ஐ நேரில் சந்தித்த அக்கட்சியின் தலைவர் Dr.RV பரதன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். இக்கட்சி, TN-ல் மத்திய, தென்மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தின் கணிசமான வாக்குகளை கொண்டுள்ளது. இதனிடையே, கள்ளர் முன்னேற்ற சங்கம் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், திருச்சி சரவணத்தேவர் மழவராயர், EPS-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


