News February 17, 2025

26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள்

image

கிருஷ்ணகிரியில் 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 மாதங்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 221 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓசூரை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, பர்கூர் பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு மட்டும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 2026, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 வெளியாகும் என தெரிவித்துள்ளார். மக்கள் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து BLA 2 அலுவலரிடம் வழங்கலாம் என்றும், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிது.

News November 21, 2025

கிருஷ்ணகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

கிருஷ்ணகிரியில் நவம்பர்-22 சனிக்கிழமையன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மருத்துவ சேவை அளிக்க உள்ளனர். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை (ம) மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

கிருஷ்ணகிரி இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.20) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!