News April 25, 2025
26ஆம் தேதி வெறி நோய் தடுப்பூசி முகாம்

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரியில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் அடையலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
Similar News
News August 13, 2025
நெல்லையப்பர் கோவில் விருந்துக்கு அழைப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற (ஆக.15) வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பொது விருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் பங்கேற்க கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன் அழைத்துள்ளார்
News August 13, 2025
BREAKING: கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை மகன் இருவர் கைதான நிலையில் மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் ஆகிய மூவரும் உடற் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
News August 13, 2025
நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.