News October 25, 2025
மத்திய அரசில் 258 காலியிடங்கள்.. ₹44,900 சம்பளம்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News October 25, 2025
டாஸ்மாக்கில் மட்டும் அக்கறை காட்டுவதா? நயினார்

தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இதற்கு TN அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மதுபாட்டில் விற்ற அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என்றும் விமர்சித்தார்.
News October 25, 2025
Sports Roundup: கால்பந்தில் இந்தியா வெற்றி

*ஆசிய யூத் கேம்ஸ் கபடியில், தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணியினருக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. *இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தேவிகா சிஹாக் முன்னேற்றம். *பிறப்பு சான்றிதழ் மோசடி காரணமாக மல்யுத்த வீரர் சஞ்சீவை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது. * நட்புறவு கால்பந்தில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.
News October 25, 2025
விஜய் புதிய முடிவு.. தவெகவினர் மகிழ்ச்சி

கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்நோக்கும் தவெகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நவ., முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


