News June 15, 2024
2,553 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மா.சு.

காலியாக உள்ள 2,553 அரசு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1,021 அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், இதுபோல் மற்ற இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மருத்துவர் சேவை ஆட்சேர்ப்பு மையத்தால் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரும்பும் இடத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Similar News
News September 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 452 ▶குறள்: நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. ▶ பொருள்: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
News September 8, 2025
அதிமுகவை உடைக்க முடியாது: EPS

எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது என EPS தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பேசிய அவர், அதிமுகவை எத்தனையோ பேர் உடைக்க பார்க்கிறார்கள், முடக்க பார்க்கிறார்கள் என்றார். ஆனால் அவற்றை தொண்டர்கள், மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கியதாகவும் அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட MP, MLA, CM ஆகலாம் எனவும் EPS குறிப்பிட்டார்.
News September 8, 2025
சிறையில் ₹522 சம்பாதிக்கும் முன்னாள் MP

பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வல் ரேவண்ணா நாள் ஒன்றுக்கு ₹522 சம்பாதிக்கிறார். பெங்களூரு பரப்ப அக்ரஹாரா சிறையில் உள்ள அவருக்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, கொடுத்த புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது அவரது வேலை ஆகும். வாரத்திற்கு 3 நாள்கள் இந்த வேலையை அவர் செய்ய வேண்டும். இவர் முன்னாள் PM தேவ கவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.