News January 2, 2025
255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

விழுப்புரத்தில் 2024ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டு என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Similar News
News November 23, 2025
விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
News November 23, 2025
விழுப்புரம்: வேலைக்கு செல்லாத கணவன் – மனைவி தற்கொலை!

விழுப்புரம்: கோணை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி புவனேஸ்வரி (32). நாகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியில் புவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 22, 2025
கண்டாச்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் 76 திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


