News August 14, 2025
தமிழகத்தில் 2,500 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2.513 உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு & D.Cop., வயது வரம்பு: 18 – 32. விண்ணப்பக் கட்டணம்: ₹500. ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.29. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News August 14, 2025
Coolie Review: லோகேஷ் – ரஜினி காம்போ ஒர்க் அவுட் ஆனதா?

ஆமிர்கான் கேமியோ உள்பட பல கேரக்டர்கள் இருந்தாலும், ஒற்றை ஆளாக ‘கூலி’யை சுமக்கிறார் ரஜினி. செளபின் ரோல் மனதில் நிற்கிறது. ரஜினியின் சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி அபாரம். விண்டேஜ் லுக்கும் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. அனிருத்தின் மியூசிக் பக்கபலம். ஆனால், மற்ற கேரக்டர்களுக்கான அழுத்தம் குறைவாக உள்ளதால், ஆக்ஷன் படத்தில் வேகம் இல்லை. ரேட்டிங்: 2.5/5. உங்க ரேட்டிங் என்ன?
News August 14, 2025
மதியம் 12 மணி வரை.. முக்கியச் செய்திகள்

*CM <<17400700>>ஸ்டாலின்<<>> தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.
*நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது: <<17399560>>அரசியல்<<>> கட்சிகள் கண்டனம்.
*ஹிமாச்சலில் மீண்டும் <<17387462>>மேகவெடிப்பால்<<>> பெருவெள்ளம்.
*பாக்.,கின் பயங்கரவாத எதிர்ப்பு பாராட்டுக்குரியது: USA.
*மாறாத <<17399590>>தங்கம்<<>> விலை. *உலகம் முழுவதும் வெளியானது ‘<<17398550>>கூலி<<>>’. *3 வீரர்களை கொடுக்க <<17400416>>CSK<<>> மறுப்பு.
News August 14, 2025
கன்னட நடிகர் தர்ஷனை கைது செய்ய உத்தரவு

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்(SC) உத்தரவிட்டுள்ளது. ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த SC சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமினை ரத்து செய்ததோடு, உடனடியாக தர்ஷனை கைது செய்ய ஆணையிட்டுள்ளது.