News October 23, 2024

250 ஆட்டோக்கள் பெண்களுக்காக இயக்கப்படும்

image

பெண்கள் பாதுகாப்பிற்காக இயக்கப்பட உள்ள இளஞ்சிவப்பு ஆட்டோக்களில் காவல்துறை உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்; 250 பெண்களுக்கு சிஎன்ஜி, ஹைபிரிட் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் கீழ் தகுதி உடைய மகளிர் நவம்பர் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News November 6, 2025

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

சென்னை: 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

image

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் – வினிஷா தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 4-வதாக மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஸ்ரீதர்-வினிஷா தம்பதியினர் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

சென்னை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

சென்னை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!