News December 18, 2024
படகு கவிழ்ந்து 25 பேர் பலி

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் மக்கள் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து 25க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. அங்கு நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சி காரணமாக மக்கள் சாலைகளை விடுத்து படகுகளில் பயணிக்கின்றனர். அப்படி அதிக மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு நடு ஆற்றில் கவிழ்ந்ததில் 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர். இந்த விபத்தில், 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Similar News
News September 2, 2025
திருப்பத்தூர்: இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப்1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 2, 2025
தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை., ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். ஆகவே, நேரத்துக்கு தூங்குங்க.
News September 2, 2025
தேர்தல் பரப்புரைக்காக மெகா பிளான் போடும் விஜய்

2 மாநாடுகளை நடத்திய தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டு வருகிறார். வருகிற 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளன்று மக்கள் சந்திப்பை தொடங்குவதே அவரது திட்டமாம். அதுவும் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பரப்புரையை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் தவெக அலுவலகத்தில் பரப்புரை வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை வியூகம் வெல்லுமா?