News September 22, 2025

இலவச கேஸ் சிலிண்டர்கள்: மத்திய அரசு அறிவிப்பு

image

நவராத்திரி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PMUY <<7491642>>உஜ்வாலா<<>> திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இத்துடன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 10.60 கோடியாக உயரும். இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு இது சான்று’ என அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.

Similar News

News September 22, 2025

கம்பேக் கொடுக்கும் குயின்டன் டி காக்

image

தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20, ODI தொடருக்கான அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2027-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெறும் காரணத்தால், குயின்டன் டி காக் ஓய்வு முடிவை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதே போல இந்திய வீரர்கள் யாரெல்லாம் கம்பேக் கொடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?

News September 22, 2025

உங்க விஜய்.. உங்க விஜய்.. ‘ஜனநாயகன்’ அப்டேட்

image

விஜய்யின் ‘ஜனநாயகன் ‘ படம் குறித்து புது அப்டேட் கிடைத்துள்ளது. இதுவரை படத்தில் இருந்து போஸ்டர்கள், ப்ரோமோ மட்டுமே படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், அனிருத்தின் இசையில் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் எனவும் பாடலை தனது சொந்த குரலில் விஜய் பாடியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாரெல்லாம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆவலோடு வெயிட்டிங்?

News September 22, 2025

GOOD NEWS: ₹7,000 விலை குறைந்தது

image

பைக்குகள் மீதான GST விலை 28%-ல் இருந்து 18% ஆக குறைந்ததால் அவற்றின் விலை சரிந்துள்ளது. இளைஞர்கள் விரும்பி வாங்கும் பல்சர் பைக்குகளின் விலை ₹7,000 முதல் ₹16,000 வரை குறைந்துள்ளது. பல்சர் 125 நியான் பழைய விலை = ₹87,878 புது விலை = ₹80,277 , பல்சர் RS200 பழைய விலை = ₹1,84,992 புது விலை = ₹1,68,730. இதே போல பல்சர் 125CF, பல்சர் NS125 UG, பல்சர் 150TD, பல்சர் NS200 மாடல்களின் விலையும் குறைந்துள்ளன.

error: Content is protected !!