News August 20, 2024

25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களில், நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, நீலகிரி, தென்காசி, தேனி, தஞ்சை, நாகை உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 22, 2026

திமுகவில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணியா?

image

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் உள்ள வேல்முருகன், கூட்டணியா? தனித்து போட்டியா? என்ற முடிவை இன்று 11 மணிக்கு அறிவிக்கிறார். 2 நாள்களாக அதிமுக தரப்பு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தங்களுடன் இணைந்தால் பண்ருட்டி, நெய்வேலி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளை தவாகவுக்கு ஒதுக்க EPS ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேல்முருகன் என்ன முடிவை எடுக்கப்போகிறார்?

News March 22, 2026

New Voter ID Holders இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

image

இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மட்டுமே 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இப்பட்டியலில் பெயர் விடுப்பட்டிருப்பின், மார்ச் 26-க்குள் விண்ணப்பித்து பெயரை இணைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க இயலாது.

News March 22, 2026

Revenge: திமுகவை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

image

தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் எப்படி காங்கிரஸை திமுக இழுத்தடித்ததோ, அதே பாணியில் தற்போது புதுச்சேரியில் திமுகவை காங்கிரஸ் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று முதல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெகத்ரட்சகன் காத்திருந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த திமுகவினர், காங்கிரசாரின் செயல்பாடு குறித்து தலைமையிடம் முறையிட சென்னை கிளம்பியுள்ளனராம்.

error: Content is protected !!