News May 15, 2024
25 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் மிதமான மழையும். செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடியுடன் லேசான மழையும் பெய்யக் கூடும். இதனால் சாலை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News January 5, 2026
பழைய சோறு உணவல்ல, அமிர்தம்!

காலையில் தினமும் இட்லி, தோசை என சாப்பிடுவதை விட பழைய சோறை சாப்பிடுவது, உடலுக்கு மிக நல்லது என்கின்றனர் டாக்டர்கள். இது, *நோய்த்தொற்றுகளை தடுக்க உதவும் *இளமையை தக்கவைக்க உதவும் *நன்மை தரும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் *வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் *உடல் சூட்டை போக்கும் *வயிற்றுப்புண்களுக்கு ஆற்ற உதவும் *மலச்சிக்கலை நீக்கும் *உடல் சோர்வை விரட்டும் *ரத்த அழுத்தம் சீராகும்.
News January 5, 2026
அரசு ஊழியர்களை ஸ்டாலின் தந்திரமாக ஏமாற்றியுள்ளார்: EPS

தேர்தலில் அறிக்கையில் பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி திமுக, அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்காமல், புதிய திட்டத்தால் ஊழியர்களை ஏமாற்றுவதாகவும் சாடியுள்ளார். வேலை நிறுத்தத்தை தந்திரமாக ஸ்டாலின் நிறுத்தியதாகவும், அரசாணை வெளியிடும்போது திமுகவை பற்றி அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
News January 5, 2026
பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பரிசுடன் ₹3000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்துவிட்டார். இப்போது தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தை வரும் 8-ம் தேதி தொடங்கிவைக்கும் CM, பரிசு தொகையுடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், முழு கரும்பு ஆகியவற்றை வழங்குகிறார்.


