News April 4, 2024
ராகுல்காந்தி முதலீடு செய்துள்ள 25 நிறுவனங்கள்.!

25 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பதாக ராகுல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தையில் சுப்ரஜித் இன்ஜினியரிங், ஐ.டி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், டி.சி.எஸ், பிரிட்டானியா உள்ளிட்ட 25 நிறுவனங்களின், ₹4.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
505-ல் 404-ஐ நிறைவேற்றி விட்டோம்: CM ஸ்டாலின்

திருவள்ளூரில், <<18778046>>’உங்க கனவ சொல்லுங்க’<<>> திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுக்கு பாலமாக இருக்க வேண்டிய கவர்னர், TN அரசு இயற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக விமர்சித்தார். மேலும், 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார். 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
News January 9, 2026
பராசக்திக்கு U/A சான்றிதழ்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 15 இடங்களில் கட் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியிருந்தது. தற்போது தணிக்கை சான்றிதழ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை ரிலீசாகிறது. மேலும், தமிழகம் முழுவதும் ’பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
News January 9, 2026
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல், மனநிலை ஆகியவற்றை சில உணவுகளின் மூலம் அதிகரிக்க முடியும். சிறிய தேர்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் உணவுகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.


