News March 27, 2025
25% கூடுதல் வரி: பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள்

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியாவையும் பாதிக்கும். அமெரிக்க சந்தையில் வலுவான தடத்தை பதித்திருக்கும் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர், 650 சிசியை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு, ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
Similar News
News November 14, 2025
பிஹாரில் திடீர் ட்விஸ்ட்

பிஹாரில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 உடன் ஒப்பிடுகையில் சுமார் 39 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் சூழல் உருவாகிருப்பதால், நிதிஷின் கரம் அங்கு இன்றளவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேடியு பின்னடைவை சந்தித்த நிலையில், நிதிஷ் CM வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் பெரும் ட்விஸ்ட் தான்.
News November 14, 2025
BREAKING: தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையில் இருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. MGB கூட்டணியும் 85 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று டப் பைட் கொடுத்து வந்த நிலையில், தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி NDA 191 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

RJD தலைவரும், MGB கூட்டணியின் CM வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 3-வது சுற்று முடிவில் தேஜஸ்வி 10,957 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், பாஜகவின் சதிஷ்குமார் யாதவ் 12,230 வாக்குகள் பெற்றுள்ளார். 30 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


