News December 5, 2025
25 ஆண்டுகால மோடி, புடின் நட்பு (RARE IMAGE)

PM மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அரசியலையும் கடந்து மிக நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நட்பு இன்று நேற்று அல்ல 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய இந்திய PM வாஜ்பாய் புடினை சந்தித்தார். அவருடன் குஜராத் CM-மாக இருந்த மோடியும் சென்றிருந்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
Similar News
News December 6, 2025
புதுகை: திருடு போன தெரு விளக்கு இரும்பு குழாய்கள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் ஊராட்சியில், எல்.இ.டி தெரு விளக்குகளை பொருத்துவதற்கான, 800-க்கும் மேற்பட்ட, ‘எல்’ வடிவ வளைவு இரும்பு குழாய்களை திருடி, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமையில் அலுவலர்கள் அந்த இரும்பு கடையில் ஆய்வு செய்து அங்கு இருந்த இரும்பு குழாய்களை மீட்டனர்.
News December 6, 2025
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்

பிக்பாஸ் தமிழில் ரம்யா, அரோரா, ஆதிரை, வியானாவை தவிர 11 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், unofficial Voting-ல் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் சுபிக்ஷா எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஒருவேளை டபுள் எவிக்ஷனாக இருந்தால் , கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. வேறு யார் வெளியேற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
News December 6, 2025
FIFA 2026 அட்டவணை வெளியானது!

2026 கால்பந்து WC-ன் அட்டவணை வெளியாகியுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 11, 2026-ல் தொடங்கும் போட்டிகள் ஜூலை 19-ல் முடிவடைகின்றன. 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதுகின்றன. அணிகள் எந்த குரூப்பில் இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிய போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.


