News December 21, 2025
25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல்லையப்பர் வெள்ளித்தேர்!

வரும் ஜனவரியில் நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை அரசு விழாவில் பேசிய அவர், கலைஞர் வழியில் இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, 1991-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த வெள்ளி தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என உறுதியளித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்!

US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல், கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது. இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது. 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும், 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 26, 2025
உதவிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற கிளிமாஞ்சாரோ சிகரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவ அவசர உதவிக்காக நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பைலட், டாக்டர், வழிகாட்டி & 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
News December 26, 2025
ரீரிலீஸாகிறதா ரஜினியின் மூன்று முகம்?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸான ‘படையப்பா’ படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், 1982-ல் வெளியாகி 250 நாள்களை கடந்து திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘மூன்று முடிச்சு’ படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம். வேறு எந்த ரஜினி படத்தை ரீரிலீஸ் செய்யலாம்? கமெண்ட் பண்ணுங்க.


