News August 4, 2024

இந்தியாவிற்கு 241 ரன்கள் இலக்கு

image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 240 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபெர்னான்டோ 40, துனித் வெல்லாலகே 39, கமிந்து மெண்டிஸ் 40 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3, குல்தீப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Similar News

News March 24, 2026

சுந்தர் சி வாழ்க்கையை திருப்பி போட்ட விஜய் படம்

image

விஜய்யின் ஆரம்பகாலத்தில் அவரது ஒரு படத்தின் ப்ரிவியூவை பார்த்துவிட்டு இதெல்லாம் கண்டிப்பா ஓடாது என்று சுந்தர் சி நினைத்தாராம். ஆனால் அந்த படத்தை ரிப்பீட் மோடில் கண்டு மக்கள் கொண்டாடினர் என கூறியுள்ளார். ஆடியன்ஸ்க்காகவே படம் எடுக்க வேண்டும் என்பதை கற்பித்த அப்படமும், படத்தின் நாயகனும் அதன்பின் தனக்கு குருநாதனாக மாறியதாகவும் பேசியுள்ளார். அது 1994-ல் வெளியான ’ரசிகன்’ திரைப்படம்; 175 நாள்கள் ஓடியது.

News March 24, 2026

பாஜக களமிறங்க விரும்பும் தொகுதிகள்

image

NDA கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ள 27 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர் தொகுதிகளை குறிவைத்துள்ளது. அத்துடன் கொங்குவில் திருச்செங்கோடு, அந்தியூர், திருப்பூர் தெற்கு, அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், மொடக்குறிச்சி, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற பாஜக விரும்பியுள்ளது. அதில் மதுரை தெற்கு, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் உள்ளன.

News March 24, 2026

RR அணியை ₹15,290 கோடிக்கு வாங்கிய கல் சோமானி

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ₹15,290 கோடிக்கு அமெரிக்காவை சார்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ராஜஸ்தான் ராயல்ஸின் மொத்த உரிமமும் கல் சோமானியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!