News January 6, 2025

241 கோரிக்கை மனுக்களை பெற்ற அரியலூர் கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 241 மனுக்கள் பெறப்பட்டன.

Similar News

News February 15, 2026

அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 15, 2026

அரியலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

News February 15, 2026

அரியலூர்: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

image

அரியலூர் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!