News April 29, 2025

241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் : ஆட்சியா் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள், அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விவரங்களை விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.. 

Similar News

News November 6, 2025

மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 6, 2025

மயிலாடுதுறை: மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மணக்குடி துணைமின் நிலையம் அரையபுரம், முருகமங்கலம், மூவலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

மயிலாடுதுறை: மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

image

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறை சந்தோஷ் (21) என்பவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை சந்தோசை கைது செய்தனர்.

error: Content is protected !!