News March 18, 2025
ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது தெரியுமா?

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது பகல், இரவு ஆகியவை மாறி மாறி வரும். இந்த 24 மணி நேரம்தான், ஒருநாள் என கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்கள் ஆகும்.
Similar News
News March 19, 2025
ISRO: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. GSLV LVM3 ராக்கெட்டுக்கான CE20 கிரையோஜெனிக் E15 இன்ஜினின் சோதனை இங்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 100 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
News March 19, 2025
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 22, 23ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 24, 25ஆம் தேதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது.
News March 19, 2025
ஷங்கர் விலகல்… கைவிடப்படும் ‘இந்தியன் 3’?

‘இந்தியன் 3’ படம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கமல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 3 படத்தின் பாடல் ஒன்றை எடுக்க ஷங்கர் லைகா நிறுவனத்திடம் பெரிய தொகையை கேட்டதாகவும், அதை லைகா தர மறுத்ததால் ஷங்கர் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்தியன் 3’ டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.