News March 17, 2024
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித் துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியினரோ வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், tn.electioncomplaints2024.income.gov.in என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.
Similar News
News August 7, 2025
உங்களிடம் ₹2,000 நோட்டுகள் உள்ளதா? இதை செய்யுங்க

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்ற முடியும். அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவற்றுடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையம் மூலமும் ரிசர்வ் வங்கிக்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT.
News August 7, 2025
இன்பநிதி- மணிரத்னம் காம்போவில் புதிய படம்?

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் கோலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் போன்றவர்களின் பெயர் அடிபட்ட நிலையில், இந்த லிஸ்ட்டில் மணிரத்னம் பெயரும் இணைந்துள்ளது. லண்டனில் படிப்பை முடித்து திரும்பும் இன்பநிதி, உடனடியாக ஷூட்டிங்கில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
News August 7, 2025
கணவருக்கு ‘ராக்கி’ கட்டும் பெண்கள்!

இந்தியாவில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல வித்தியாச கலாச்சார நடைமுறைகளில் இதுவும் ஒன்று. ராக்கி என்றால் சகோதரன்-சகோதரி பாசம் நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால், இன்றளவும் ம.பி.யின் சிண்ட்வாரா மாவட்டத்தில் கோண்டி சமூக பெண்கள் தங்கள் கணவர்களுக்கே ராக்கி கட்டுகிறார்கள். தங்களை பாதுகாப்பவரை கெளரவிக்கும் விதமாக அப்பகுதி மக்களின் இந்த வழக்கம் உள்ளது. வியப்பாக உள்ளது அல்லவா!