News November 24, 2024
24 மணி நேர குடிநீர் திட்டம் தாம்பரத்தில் விரைவில் அமல்

தாம்பரம் மாநகராட்சியில் அனைவருக்கும் சீரான வகையில் குடிநீர் கிடைக்கும் நோக்கத்தில், 24 மணி நேர குடிநீர் திட்டம் முதல் கட்டமாக 5 வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, டெண்டர் கோரப்பட்டதை அடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக அண்ணா பல்கலை., வாயிலாக, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரிரு நாட்களில் தேவையான உபகரணங்கள் இறக்கப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கும்.
Similar News
News November 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
செங்கல்பட்டு காவல் துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல் துறை இன்று (நவம்பர் 18) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது லிங்க்களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு செங்கல்பட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மையான அபராத ரசீது லிங்க்கள் .gov.in முடிவடையும் அரசின் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 18, 2025
செங்கை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <


