News August 18, 2024

23ம் தேதி TNPSC குரூப் 3 தேர்வு 4ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

image

TNPSC குரூப் 3 தேர்வு 4ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து TNPSC வெளியிட்ட செய்திக் குறிப்பில், குரூப் 3 எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடந்ததாகவும், ரிசல்ட் 2023 ஆகஸ்டில் வெளியானதாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு, 3 கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளதாகவும், 4ம் கட்ட சரிபார்ப்பு பிராட்வேயில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நாளை டெபாசிட்!

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை(ஆக.1 5) செலுத்தப்பட உள்ளது. 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. நாளை பொது விடுமுறை என்பதால் இன்றே பணம் வரவு வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம்போல் நாளையே வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

கவர்னர் எனும் நச்சுப் பாம்பு மூலம் குடைச்சல்: KN நேரு

image

BJP, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களில் கவர்னர் எனும் நச்சு பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுப்பதாக அமைச்சர் KN நேரு சாடியுள்ளார். மேலும், TN-க்கு RSS அனுப்பி வைத்த கைக்கூலி RN ரவி என கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், அவமானங்களை மட்டுமல்ல தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை எனவும் விமர்சித்துள்ளார். TN அரசு குறித்த RN ரவியின் அறிக்கையை படித்தால் அமித்ஷாவே சிரிப்பார் எனவும் கூறியுள்ளார்.

News August 14, 2025

உங்களுக்கு high BP இருக்கா? இதை தவிருங்கள்

image

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு (high BP) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: காஃபி -இதிலுள்ள கஃபைன் BP-யை அதிகரிக்கும் *சர்க்கரை -உடல்பருமன், BP-யை அதிகரிக்கும் *பதப்படுத்தப்பட்ட இறைச்சி – இதில் உப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் BP உயரும் *பீநட் பட்டர் – இது கொழுப்பை அதிகரித்து BP-யை உயர்த்தும் *மைதா பிரெட் *உப்பு – அதிகமானால், BP உயரும். ஆக, தினசரி 3 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம்.

error: Content is protected !!