News May 28, 2024

239 கடைகளில் உணவு பாதுகாப்புதுறையினர் சோதனை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மாம்பழ விற்பனை கடைகள் மற்றும் பழ குடோன்களில் கடந்த 25 நாட்களில் 239 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் செயற்கை ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 158 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 16 வியாபாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.16,000 அபராதம் விதித்தனர்.

Similar News

News November 27, 2025

ஈரோடு: BOI வங்கியில் வேலை! CLICK

image

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (BOI), இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இங்கு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். (SHARE)

News November 27, 2025

அந்தியூரில் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

அந்தியூரில் இருந்து இன்று காலை ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது பேருந்தில் 15 வயது சிறுமி பயணித்துள்ளார். அந்த சிறுமியிடம் பேருந்தின் நடத்துனர் மற்றும் உதவியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் நடத்துனர் மற்றும் உதவியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News November 27, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!