News March 25, 2025
230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 16, 2025
சேலம்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

சேலம் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சேலம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தியுள்ளது.
News October 16, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்பு தேடும் பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் மாதாந்திர தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை www.tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
News October 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.