News August 26, 2024

தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு!

image

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குசகைல் எல்லைப் பகுதியில் வாகனங்களில் பயணித்த மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவற்றில் இருந்து கீழிறங்கி, அடையாளத்தைக் கேட்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Similar News

News October 27, 2025

புயல் அலர்ட்: 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.

News October 27, 2025

உடல் வலியை குறைக்க இந்த கஞ்சியை குடிங்க!

image

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

News October 27, 2025

மீண்டும் திமுக ஆட்சி.. சிரித்தபடி பதிலளித்த OPS

image

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.

error: Content is protected !!