News February 2, 2025
பயங்கர மோதலில் 23 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ராணுவ வீரர்களும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்தாண்டில் நிகழ்ந்த 444 தாக்குதல்களில், 685 வீரர்கள் பலியாகினர். பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் ஒருபுறம் பெரும் சவாலாக உள்ளது.
Similar News
News September 4, 2025
தரவரிசையில் சறுக்கிய தமிழக கல்லூரிகள்

இந்திய கல்லூரிகள் தரவரிசையில் எப்போதும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே அரசுக் கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரி, இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2023-ல் இது 3-ம் இடத்தில் இருந்தது. டாப் 30 கல்லூரிகளில் PSGR கிருஷ்ணம்மாள் (9-வது இடம்), PSG -10, லயோலா -14, கிறிஸ்தவ கல்லூரி -16, மதுரை தியாகராஜர் -20, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி (22) திருச்சி புனித ஜோசப் (25) இடங்களில் உள்ளன.
News September 4, 2025
Beauty Tips: உங்களை ஒல்லியாக காட்டும் உடைகள்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தங்களை ஒல்லியாக காட்டிக்கொள்ள ஆசைப்படுவார்கள். சில சமயங்களில் உங்களுக்கு ஏற்ற உடை கிடைப்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் உடையில் இந்த சிறு சிறு விஷயங்களை மாற்றினால் நீங்கள் பருமனாகவே இருந்தாலும் உங்களை அது ஒல்லியாக காட்டும். அது என்ன மாதிரியான உடைகள் என்பதை தெரிந்துக்கொள்ள Swipe பண்ணுங்க. SHARE.
News September 4, 2025
திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS

2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு புதிய வடிவில் பெயர் சூட்டி வருவதாக சாடினார். மேலும், டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழலை ED கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் பலர் கைதாக உள்ளனர் என ஆருடம் தெரிவித்தார்.