News March 12, 2025
23 லட்சம் வேலை வாய்ப்பு… AI துறையில் ஜாக்பாட்..!

வரும் 2027இல் AI துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என Bain and Company நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த துறையில் வேலைவாய்ப்பு 1.5 – 2 மடங்கு உயரும் எனவும், 2019 முதல் ஆண்டுதோறும் AI தொடர்பான வேலைவாய்ப்புகளும், ஊதியமும் 21% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸி. போன்ற நாடுகளில் AI பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
Similar News
News March 12, 2025
‘இந்தி வாழ்க’ கசிந்த பராசக்தி ஸ்டில்ஸ்!

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியைக் கருவாக கொண்டு, தற்போது ‘பராசக்தி’ படம் உருவாகி வருகிறது. படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்புகள் நிலவும் சூழலில், தற்போது சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் கசிந்து வைரலாகி வருகிறது. ஒரு பஸ்ஸில் ‘இந்தி வாழ்க’ என்ற வாசகங்கள் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான படம் தான் போலயே!
News March 12, 2025
டிராவலின் போது வாந்தி வராமல் இருக்க…

உடலின் பகுதிகள் மாறி மாறி மூளைக்கும் அனுப்பும் சிக்னலின் காரணமாகவே, திடீரென டிராவலின் போது வாந்தி வருகிறது. இதை தடுக்க சிம்பிள் டிப்ஸை டாக்டர்கள் வழங்குகிறார்கள்: ட்ரெயினில் போகும் போது, வண்டி எந்த திசையை நோக்கி போகுதோ அந்த திசையை பார்த்த மாதிரி அமருங்கள் *காற்று முகத்தில் படும்படி ஜன்னலை திறந்து வையுங்கள் *அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பயணம் செய்ய வேண்டாம் *நன்றாக தண்ணீர் குடியுங்கள்.
News March 12, 2025
தமிழக கல்வி முறையை சீர்குலைக்காதீங்க: அன்பில்

NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இருமொழி அடித்தளத்துடன் செயல்படும் தமிழ்நாட்டில் 1,635 CBSE பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால்,1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயின்று வருகின்றனர். இதன் மூலம் மக்கள் எந்த கல்வி முறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.