News June 27, 2024
அதிமுக போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு 23 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு வரக்கூடாது, அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
Similar News
News January 20, 2026
விஜய் விரைவில் இதை அறிவிக்கலாம்

தவெக நிர்வாகிகள் & KAS உடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கவும் குழுக்கள் அமைப்பது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் காங்., போலவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை தவெக அறிவிக்க வாய்ப்புள்ளது. இக்கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
News January 20, 2026
இரவு உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க!

காலை உணவு எவ்வளவு முக்கியமோ, இரவு உணவும் உடலுக்கு அவ்வளவு முக்கியம். எனவே, இரவில் இந்த தவறுகளை பண்ணாதீங்க என கூறுகின்றனர் டாக்டர்கள். *கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் அதிகம் உள்ள தோசை, அரிசி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை தவிர்க்கவும் *பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிட வேண்டாம் *முக்கியமாக தாமதமாக உணவருந்தக் கூடாது *இந்த தவறுகளை செய்தால் BP, சுகர், கொலஸ்ட்ரால், பருமன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்.
News January 20, 2026
வங்கி கணக்கில் ₹4,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. <


