News September 20, 2024
23ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் (www.passportindia.gov.in) இன்று இரவு 8 மணியில் இருந்து செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த பராமரிப்பு காலத்துக்கு பிறகு இணையதளத்தை பயன்படுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக பணிகள் தொடர்பான முடிவுகள்,நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா குறித்தும்,சினிமாவில் பொன்விழா கண்ட ரஜினிகாந்த் மற்றும் எம்பியாக பதவியேற்றுள்ள கமலஹாசனுக்கும் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாகவும் பேச உள்ளனர்.
News September 15, 2025
கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
News September 15, 2025
தயார் நிலையில் மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.