News January 9, 2025

 22,466 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 22,466 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

காரைக்கால் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

BREAKING: புதுச்சேரி அரசை பாராட்டிய விஜய்

image

புதுச்சேரியில், இன்று தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம், புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், புதுச்சேரி பாராபட்ச்சமின்றி நடந்துகொள்ளும் புதுவை அரசுக்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரி அரசு, திமுக அரசு மாறி கிடையாது, மக்களுக்கு பாதுகாப்பு உள்ள அரசு என்று விஜய் திமுகவை சாடி பேசியுள்ளார்.

News December 9, 2025

போலீசாருடன் மல்லுக் கட்டும் தொண்டர்கள்

image

புதுவையில் உப்பளம் பழைய துறைமுகம் பகுதியில், தவெக வின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர் கூட்டம் அதிகமாக வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் வந்த காரணத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

error: Content is protected !!