News December 13, 2024

 22,000 கனஅடிநீர் வெளியேற்றம்- ஆட்சியர் அறிவிப்பு

image

“கடனாநதி-ராமநதி அனையிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (டிச.13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News August 31, 2025

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 31, 2025

அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜமுனாராணி தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினார்கள் கலந்து கொண்டனர். இதில் 121 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

News August 31, 2025

தூத்துக்குடி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

image

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று(ஆக.31) நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்கள் செல்வதற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 உயர்ந்து ரூ.95 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது என கூறப்படுகிறது.

error: Content is protected !!