News March 21, 2025
22 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை

மயிலாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்த ஏழுமலை என்பவரிடம் ராமமூர்த்தி கடனுக்கு பழங்கள் கேட்டுள்ளார். ஏழுமலை பழங்களை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா நேற்று உத்திரவிட்டுள்ளார்.
Similar News
News April 14, 2025
மயிலாடுதுறை : ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
தமிழ் புத்தாண்டுக்கு இது கட்டாயம் செய்ய வேண்டும்

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
News April 14, 2025
தைலகாப்பு அலங்காரத்தில் காட்சி தரும் தோணியப்பர்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாய காட்சியாக தோணியப்பர்-உமா மகேஸ்வரி தாயாராக அருள் பாலிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே தைலக்காப்பு எனும் சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தோனியப்பர் உமாமகேஸ்வரி தாயாருக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்