News March 27, 2024
யூடியூப்பில் 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

இந்தியாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 22.5 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பை இந்தியாவில் 46.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 2023 அக்டோபர் முதல் டிச., வரையிலான காலத்தில் வெளியான வீடியோக்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம், உலகளவில் இதே காலத்தில் வெளியான 90 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது.
Similar News
News February 17, 2026
PM ஆக பதவியேற்கும் தாரிக் ரஹ்மான்.. விழாவில் ஓம் பிர்லா!

வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும், Ex PM கலீதா ஜியாவின் வாரிசுமான தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்க உள்ளார். தெற்கு பிளாசாவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், இந்தியா தரப்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவையின் GS உத்பல் குமார் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 17, 2026
திமுக MP-யிடம் வேதனைப்பட்ட செங்கோட்டையன்!

துரோகத்தின் மொத்த உருவம் EPS தான் என திமுக MP செல்வகணபதி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், பார்லிமெண்ட் தேர்தலில், தான் ஜெயிக்க கூடாது என்பதற்காக எந்த செங்கோட்டையன் வீட்டு வாசலில் காத்திருந்தாரோ, அவரையே கட்சியில் இருந்து EPS நீக்கிவிட்டார் என பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தன்னை தொடர்புகொண்ட KAS, ’மாப்ள என்னையும் குத்திட்டான்யா’ என்று வேதனை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
News February 17, 2026
உங்கள் வீட்டில் காகம் கரைகிறதா?

வீட்டின் மாடி (அ) பால்கனியில் காகம் கரைந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? காக சாஸ்திரத்தின்படி, நண்பகலில் காகம் வடக்கு, கிழக்கு திசைகளில் இருந்தபடி சத்தம் எழுப்பினால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படி நடந்தால், வீட்டிற்கு விருந்தாளிகள் வரலாம். அதேநேரம், தெற்கு திசையில் இருந்து சத்தம் எழுப்பினால், மோசமான அறிகுறியாகும். உங்கள் முன்னோர் மகிழ்ச்சியாக இல்லை; பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புள்ளதாம்.


