News February 3, 2025
22 ஒன்றியங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயில் மலையை காக்கவும், மத நல்லிணக்கத்தை காக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் உள்ள 22 ஒன்றியங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் <
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: அனுமதி மறுத்ததால் அரை நிர்வாண போராட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் கோவிலில் நாளை பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க காவல்துறையிடம் பாதுகாப்பு மனு அளித்தனர். இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்படும் என பொங்கல் வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தனர். இந்நிலையில் விசிக மாவட்ட செயலாளர் வேல் பழனியம்மாள் தலைமையில் இன்று 12 மணி அளவில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.