News January 7, 2026
22 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு!

சத்ரபதி சிவாஜி குறித்த ‘Shivaji: Hindu King in Islamic India’ புத்தகத்தில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலை., பதிப்பகம் (OUP) மன்னிப்பு கோரியுள்ளது. 2003-ல் வெளியிட்ட புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், பதிப்பகமும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், 22 ஆண்டுக்கு பின் சிவாஜியின் வாரிசு MP உதயன்ராஜே மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக OUP தெரிவித்துள்ளது.
Similar News
News January 9, 2026
காஞ்சிபுரம் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News January 9, 2026
அப்பா ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் சாத்தியமா?

NDA கூட்டணியில் பாமக (அன்புமணி) இணைந்துவிட்ட நிலையில், ஸ்டாலினின் ஆட்சி நன்றாக உள்ளது என திமுக கூட்டணிக்கு அச்சாரமிடும் வகையில் <<18806660>>ராமதாஸ்<<>> பேசியுள்ளது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், வட தமிழகத்தில் பாமக வாக்குகள் பிரிந்து இரு கூட்டணிகளையும் திக்குமுக்காட வைக்க அதிக வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News January 9, 2026
சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை விஜய் அறிவித்துள்ளார். இந்த குழுவில் சமீபத்தில் கட்சியில் இணைந்த JCD பிரபாகர் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் செங்கோட்டையன் பெயர் இல்லை. மேலும் அருண்ராஜ், ராஜ்மோகன், மயூரி உள்ளிட்ட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு TN முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையினை தயார் செய்யவுள்ளது. TVK தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெற வேண்டியது என்ன?


