News March 21, 2025
22 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை

மயிலாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்த ஏழுமலை என்பவரிடம் ராமமூர்த்தி கடனுக்கு பழங்கள் கேட்டுள்ளார். ஏழுமலை பழங்களை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா நேற்று உத்திரவிட்டுள்ளார்.
Similar News
News April 16, 2025
மயிலாடுதுறையில் சத்துணவு மையத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவா்கள் ஏப்.29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி ஆட்சியா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 16, 2025
பச்சைப்பயறு கொள்முதல் – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.86.82க்கு கொள்முதல் செய்ய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
News April 16, 2025
மயிலாடுதுறை: 10th முடித்தவர்களுக்கு வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (PACKING HELPER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.7,500 – ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கே <