News April 22, 2025
215 கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

தமிழ்நாடு முழுவதும் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை மாநகராட்சியில், மத்திய மண்டலத்தில் 49 கொடிக்கம்பங்கள், கிழக்கு மண்டலத்தில் 71 கொடிக்கம்பங்கள், வடக்கு மண்டலத்தில் 46 கொடிக்கம்பங்கள், மேற்கு மண்டலத்தில் 22 கொடிக்கம்பங்கள், தெற்குமண்டலத்தில் 27 கொடிக்கம்பங்கள் என மொத்தம் 5 மண்டலங்களை சேர்த்து 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
கோவை மாவட்டத்தில் வேலை வேண்டுமா?

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News July 8, 2025
கோவையில் வேலை! தேவையான ஆவணங்கள்

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், ▶️கல்வித்தகுதி சான்றிதழ், ▶️அனைத்து மதிப்பெண்கள் சான்றிதழ்களின் நகல்கள், ▶️சாதி சான்றிதழ், ▶️இருப்பிட சான்றித நகல் (குடும்ப அட்டை/ ஆதார அட்டை). இந்த ஆவணங்களின் நகல்களில் அனைத்திலும் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
News July 8, 2025
கோவை: இன்று இப்பகுதியில் மின்தடை

கோவையில் பெரியநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் இன்று(ஜூலை.8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.