News February 11, 2025

21,413 காலியிடங்கள் 10-வது பாஸ் போதும்

image

இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்களை (Gramin Dak Sevaks- GDS) நிரப்புவதற்கான <>அறிவிப்பு<<>> வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இதில் 2,292 பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் அடிப்படை தகுதிகளாகும். சைக்கிள் (அ) இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-40. மெரிட் அடிப்படையில் ஆட்தேர்வு நடைபெறும். மார்ச் 3 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Similar News

News February 11, 2025

7 வயது மகனை கொன்ற தந்தை

image

பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

News February 11, 2025

வார விடுமுறை: குவியும் சிறப்பு பஸ்கள்

image

வார விடுமுறை என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில், வார விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக, வரும் 14, 15ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற ஊர்களுக்கு 485 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 102 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News February 11, 2025

எளிதாக உடல் எடையை குறைக்கலாம்

image

பலவித டயட்களுக்கு மத்தியில் உடல் எடையை குறைப்பதற்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் எளிமையான டயட், Calorie Deficit டயட்தான். அதாவது கலோரி என்பது நமது உடலுக்கான எரிபொருள். நாளொன்றுக்கு நமக்கு தேவைப்படும் கலோரிகளை விட குறைவாக சாப்பிடும்போது உடல் எடை தானாக குறையும். இதனை சரியாக கணக்கிட்டு, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை சரி விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். எடை குறையும்.

error: Content is protected !!