News March 15, 2025
214 பிணைய கைதிகள் சுட்டுக் கொலை: BLA அதிர்ச்சி தகவல்

214 ரயில் பயணிகளை சுட்டுக் கொன்று விட்டதாக பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் குறித்து பாகிஸ்தானுக்கு 48 மணி நேர கெடு விதித்தும், பதில் அளிக்காததால் 214 பேரை கொன்று விட்டதாக பிஎல்ஏ கூறியுள்ளது. 400 பேருடன் சென்ற பயணிகள் ரயிலை பிஎல்ஏ அண்மையில் கடத்தியது. இதில் 33 பிஎல்ஏ அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும், 354 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்தது.
Similar News
News July 8, 2025
இன்டர்நெட் இல்லாமலே மெசேஜ் அனுப்பலாம்… புதிய ஆப்!

டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜாக் டோர்ஸி, ‘பிட்சாட் (Bitchat) என்ற புதிய மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர், (அ) சர்வர் எதுவும் தேவையில்லை. புளூடூத் மூலம் peer-to-peer முறையில் இந்த ஆப்பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது டெஸ்டிங்கில் உள்ளது. தனியுரிமை பாதுகாப்பு மற்றும் off-grid communication நோக்கில் பிட்சாட்டை உருவாக்கியுள்ளதாக ஜாக் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
தவெகவின் புதிய செயலி.. என்ன ஸ்பெஷல்?

தவெக கட்சி சார்பில் MY TVK என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இக்கட்சி செல்போன் செயலியை கொண்டு சேர்க்கையை நடத்தி வருகிறது. புதிய செயலியை விஜய் விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தொண்டர்களுக்கு அவரே எடுத்து சொல்வாராம். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி வருகிறார்.
News July 8, 2025
கலர் கலராக இருக்கும் வாட்டர் பாட்டில் மூடி சொல்லும் சங்கதி?

ஒவ்வொரு பாட்டில் மூடியின் கலரும் அந்த தண்ணீரை பற்றிய தகவலை சொல்கிறது ◆நீலம்: ஊற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர், மினரல் வாட்டராகும் ◆வெள்ளை: இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் ◆பச்சை: ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் ◆கருப்பு: அல்கலின் சேர்க்கப்பட்ட தண்ணீர் ◆மஞ்சள்: வைட்டமின்கள் & எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்கப்பட்ட தண்ணீர். SHARE IT.