News February 10, 2025

வேங்கைவயலில் 21 விசிகவினர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிகவினர் சிலர் இன்று காவல்துறையின் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்றதால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

Similar News

News February 11, 2025

பும்ரா CTல் விளையாடுவாரா? இன்று தெரியும்

image

இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் BCCI இன்று இறுதி முடிவை எடுக்கும் என தெரிகிறது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியை அவர் தவறவிட்டால், அது IND அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.

News February 11, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும் – புத்தர்.

News February 11, 2025

சல்மான் கான், அட்லீ இணையும் படம் ரத்து?

image

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவிருந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீரியட் ஆக்‌ஷன் படமாக உருவாகவிருந்த இப்படத்தில் ரஜினி (அ) கமல் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இக்கூட்டணியில் படம் உருவாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ அல்லு அர்ஜுனுக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

error: Content is protected !!