News October 9, 2025
சற்றுமுன்: அதிரடியாக கைது செய்தனர்

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் <<17944206>>மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் <<>>அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கோடம்பாக்கத்தில் வைத்து சற்றுமுன் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News October 9, 2025
Recipe: பப்பாளிப் பழ அவல் கேசரி செய்யலாம் வாங்க!

வாணலியில் வெள்ளை அவலை நன்றாக வறுத்து, ரவை பதத்தில் அரைத்து தூளாக்கவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், கொதிக்க வைத்த பாலை ஊற்றி, பப்பாளிக் கூழ், சர்க்கரை, பொடித்த அவல், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையில் நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளிப் பழ அவல் கேசரி ரெடி. SHARE IT.
News October 9, 2025
ரோஹித், கோலி மரியாதையாக நடத்தப்பட வேண்டும்: அஸ்வின்

ரோஹித் மற்றும் கோலி விஷயத்தில் BCCI அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இருவரும் 2 சகாப்தங்களாக அணிக்காக விளையாடிய சீனியர்கள் எனவும், அவர்கள் அணியில் நீடிக்க தகுதியுடையவர்கள் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், கேப்டன் பொறுப்பில் ரோஹித் இருக்க வேண்டியவர் எனவும், இருப்பினும் 2027 WC-ஐ கவனத்தில் கொண்டு BCCI எடுத்த முடிவில் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
திமுகவில் இணைந்தார்.. மீண்டும் வெடித்தது சர்ச்சை

விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சுரேந்திரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த மாதம், கரூர் நகர காங்., நிர்வாகி கவிதாவை செந்தில்பாலாஜி திமுகவில் இணைத்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் CM ஸ்டாலின் வரை சென்ற நிலையில், காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், திமுக MLA சீனிவாசன், சுரேந்திரனை இணைத்தது சர்ச்சையாகியுள்ளது.