News December 16, 2025

21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

image

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த மழை வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்று வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.

Similar News

News December 22, 2025

BREAKING: இரவில் விஜய் கட்சியில் இணைந்தார்

image

பிற கட்சியின் முக்கிய தலைவர்களை இணைக்கும் முயற்சியில் தவெக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு பிரபல வழக்கறிஞர் சத்யகுமார் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக, அதிமுக Ex MLA-வான JCD பிரபாகரின் மகன் அமலன், யூடியூபர் ஃபெலிக்ஸ், அரசியல் விமர்சகர் அனந்தஜித் ஆகியோர் தவெகவில் இணைந்திருந்தனர். ஒரே நாளில் முக்கிய முகங்கள் விஜய் கட்சியில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது.

News December 22, 2025

திமுக அரசு இந்து எதிர்ப்பு ஆட்சி நடத்துகிறது: H ராஜா

image

தமிழகத்தில் தற்போது இந்து எதிர்ப்பு ஆட்சியே நடக்கிறது என்று H ராஜா விமர்சித்துள்ளார். கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை பெருமளவில் கொள்ளையடித்துள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், திருச்செந்தூர் உள்பட பல கோயில்களில் முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றார். முருகனுக்கு எதிரான அரசை நடத்தும் இவர்களுக்கு, 2026 தேர்தலில் முருக பக்தர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் சாடினார்.

News December 22, 2025

மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

image

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவிடுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!