News September 18, 2024
21 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து

சேலம் மாவட்டம், ஓமலூரில் அரசின் போக்குவரத்து விதிகளை மீறியும், மதுப்போதையிலும் வாகன ஓட்டியதாக 21 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்துச் செய்து ஓமலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர் சோதனையிலும், கண்காணிப்பிலும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 24, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதது. அதில், இணையம் வழியாக நிதி மோசடியில் பாதிக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தாலோ, உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
News August 24, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 24, 2025
சேலத்தில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!