News December 31, 2025

21 நாள்கள் விதி தெரியுமா?

image

நாளை புது வருடம் பிறக்கிறது. பிடிக்காத அல்லது கெட்ட பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி வாடிக்கையாக்க வேண்டுமா? இதற்கு இந்த 21 நாள்கள் விதி கைகொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தினசரி தொடர்ந்து 21 நாள்களுக்கு செய்தால், அது அப்படியே பழக்கமாகிவிடும் என்கிறது இந்த விதி. இதையே 90 நாள்கள் செய்தால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.

Similar News

News January 29, 2026

கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

image

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், அற்புத அலையாத்தி மரங்கள் நிறைந்த, இந்தியாவின் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்கள் எதிர்கொள்ளும் திடீர் வானிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வரும் 2100-க்குள், சுமார் 413 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்தி காடுகள் நீரில் மூல்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

₹5 லட்சம் வரை கடனுக்கு வட்டி இல்லை

image

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 29, 2026

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கணவன் – மனைவி!

image

வீட்டில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கு மத்தியில், இந்த தம்பதிக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஹேமச்சந்திரா- வினிதா தம்பதி ஹைதராபாத்திலுள்ள IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனாலும், அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, குரூப் 2 தேர்வு முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வினிதா சப்-ரிஜிஸ்டாராக, ஹேமச்சந்திரா கலால் வரி ஆய்வாளராக தேர்வாகியுள்ளனர்.

error: Content is protected !!